அச்சசோ…இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகிய ரஷீத் கான்…அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

rashid khan afghanistan

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் பெரும் சோகத்தில் இருக்கிறது. ஏனென்றால், அவர்களின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் முதுகில் ஏற்பட்ட காயத்தால் முதல் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக அவர் விலகியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய ரஷீத் கான் அருமையாக பந்துவீசி மொத்தமாக இந்த சீசனில் மட்டும் 27 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். செம பார்மில் இருக்கும் ரஷீத் கான் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் விளையாடதது ஆப்கானிஸ்தான்  அணியையும், ஆப்கானிஸ்தான்  அணியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் ரஷீத் கான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  உறுதிப்படுத்தியது. மேலும்,  இந்த மாத இறுதியில் பங்களாதேஷுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால், ரஷீத் காயத்தில் இருந்து விரைவில் குணமடைவது ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்