ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமனம்.
ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக இருந்த முகமது நபிக்கு பதிலாக புதிய கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் ரஷித் கான் மிகப்பெரிய பெயர். உலகெங்கிலும் உள்ள அனைத்து தர போட்டிகளில் விளையாடுவதில் அவருக்கு மகத்தான அனுபவம் உள்ளது, இது அணியை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல உதவும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மிர்வைஸ் அஷ்ரஃப் கூறியுள்ளார்.
ரஷித் கானுக்கு இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் அட்டாலானை மூன்று வடிவங்களிலும் வழிநடத்திய அனுபவம் உள்ளது, மேலும் அவரை மீண்டும் டி20 ஐ வடிவத்திற்கு கேப்டனாக வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் சிறந்து விளங்குவார் மற்றும் தேசத்திற்கு மேலும் பெருமைகளை கொண்டு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி அடுத்தாண்டு பிப்ரவரியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அங்கு அவர்கள் மூன்று T20I போட்டிகள் விளையாட உள்ளனர். இது 2019-க்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் கேப்டனாக ரஷித் கானின் முதல் சுற்றுப்பயணமாகும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…