உலகக்கோப்பை போட்டிப்போட மட்டும் வரமாட்டோம்..!ஆப்கான் வீரர் தடலாடி..!
உலகக்கோப்பை திருவிழா வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.இதற்கு பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கு கொள்ளும்.தற்போது ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை போட்டிப்போட மட்டும் வரமாட்டோம் என்று ஆப்கான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் நாங்கள் இந்த உலகக்கோப்பையில சிறப்பாக விளையாடுவது மிக அவசியமானது.
உலகக்கோப்பையில சும்மா வந்து கலந்து கொண்டு அதன் பின் சொந்த நாட்டுக்கு திரும்பபோவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த தொடரில் நாங்கள் ஒரு சரியானஅணியாக கச்சிதமான திட்டமிடுதலுடன் இங்கிலாந்து செல்வோம்.
மேலும் இந்த ஐபிஎல் எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது.அதை உலகக் கோப்பையில் பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஆப்கான் சிறந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.