Ranji Trophy : அரை இறுதியில் படு தோல்வி அடைந்த தமிழ்நாடு ..! இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற மும்பை ..!

RAnji Trophy [file image] (1)

Ranji Trophy : இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மதிப்பு மிக்க போட்டியாக பார்க்கபடுவது ரஞ்சி கோப்பையாகும். இது 89-வது ரஞ்சி கோப்பையாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி இரண்டு முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது ரன்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதி வரை தமிழ்நாடு அணி வந்தது. அரை இறுதியில் போட்டியில்,  41 முறை ரஞ்சி கோப்பையை வென்ற வலுவான மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

Read More :- IPL 2024 : அச்சச்சோ ..சென்னை அணிக்கு முதல் அடி ? ஐபிஎல்லிருந்து வெளியேறினார் கான்வே..!

இதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கியது தமிழ்நாடு அணி, முதல் இன்னிங்சில் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 146 ரன்களில் சுருண்டது. அதன் பின் களமிறங்கிய மும்பை அணி சிறப்பாக விளையாடி 378 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மும்பை அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் சதம் விளாசி 109 ரன்களும், தனுஷ் கோட்டியான் 89 ரன்களும் எடுத்தனர்.

தமிழ்நாடு அணியில்  சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதை தொடர்ந்து 232 ரன்களுடன் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு பேட்டிங் செய்ய களமிறங்கியது தமிழ்நாடு அணி. இந்த முறியும் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தமிழ்நாடு திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறிய தமிழ்நாடு அணி இறுதியில் 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தமிழக அணியில் அதிகபட்சமாக பாபா அப்ராஜித் 70 ரன்களை எடுத்தார்.

Read More :- IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?

இதன் மூலம், மும்பை அணி ஒரு இன்னிங்க்ஸுடன் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டார். 2-ஆம் அரை இறுதி போட்டி முடிந்த நிலையில், முதல் அரை இறுதி போட்டியில் விதர்பா, மத்திய பிரதேச அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. அந்த போட்டியின் 3-வது நாள் இன்று முடிவடைந்த நிலையில் அந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வருகிற மார்ச் -10 ம் தேதி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்