ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு அணி முன்னேற்றம்

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோதுகின்றன. இதில் ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு அணி தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப்புடன் மோதியது.

தமிழ்நாட்டின் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 435 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப், தமிழ்நாடு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸ் விளையாடிய பஞ்சாப் அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

“ரோகித் சர்மாவிடம் போய் சொல்லு” – ஜெய்ஸ்வாலுக்கு அனில் கும்ப்ளே அறிவுரை.

அந்த அணி சார்பில் நேஹல் வதேரா 109 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் விளையாடிய தமிழ்நாடு அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 71 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக தமிழ்நாடு வீரர் பாபா இந்திரஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்