அடிவயிற்றில் பாய்ந்த பந்தால் பரபரப்பான மைதானம்..நடுவருக்கு நேர்ந்த சோகம்
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடுவரின் அடிவயிற்றில் பந்து தாக்கியதால் மைதனாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பின் அவருக்கு பதிலாக மாற்று நடுவர் அறிவிக்கப்பட்டார்.
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் மற்றும் சவுராஷ்ட்ரா அணிகள் மோதும் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஆனது ராஜ்கோட்டில் நடைபெற்றது. அப்போது களத்தில் வீரர்கள் எறிந்த பந்தானது எதிர்பாராவிதமாக களத்தில் நின்றிருந்த நடுவர் சம்சுதீனின் அடிவயிற்றுக்கு கீழ் பகுதியை பலமாக தாக்கியது. பந்து தாக்கியதில் படுகாயமடைந்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.முதலுதவிக்கு மருத்துவக்குழு வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் ஆட்டம் நடைபெறும் போது மைதானத்தை விட்டு நடுவர் வெளியேறி நிலையில் இத்தொடருக்கு மாற்று நடுவராக யஸ்வந்த் பார்டே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.