38 அணிகள்…. இன்று 16 போட்டிகள்! தொடங்கியது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்…

38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் தொடரான 2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன்பின், அரையிறுதி, இறுதிப்போட்டி நடைபெறும்.
டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி?
மோசமான இடத்தை பெறும் 2 அணிகள் அடுத்த சீசனில் ‘பிளேட்’ பிரிவுக்கு தரம் இறக்கப்படும். அதுபோன்று, ‘பிளேட்’ பிரிவில், கடந்த சீசனில் எலைட் பிரிவில் இருந்து தரம் இறக்கப்பட்ட நாகலாந்து, ஐதராபாத் மற்றும் மேகாலயா, சிக்கிம், மிசோரம், அருணாசலபிரதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் ‘எலைட்’ பிரிவுக்கு முன்னேறும். இந்த நிலையில், தொடக்க நாளான இன்று 16 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று குஜராத்தில் நடைபெற்று நடக்கும் போட்டியில் தமிழ்நாடு, குஜராத் அணிகள் மோதுகின்றன. காலிறுதி போட்டிகள் பிப்.23-ம் தேதியும், அரையிறுதி போட்டிகள் மார்ச் 2-ம் தேதியும், இறுதிப்போட்டி மார்ச் 10-ம் தேதியும் நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025