‘அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளது!’ டிராவிட்டின் மகன் படைத்த சாதனை!
- இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என செல்லமாக அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட் போலவே இவரது மகனு சமித்தும் நல்ல கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வருகிறார்.
- கர்நாடகாவில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இரட்டை சதம் விளாசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். இவரது மகன் சமித், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டார். கர்நாடகாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 250 பந்துகளில் 201 ரன்களை குவித்து உள்ளார்.
இதில் 22 பவுன்டரிகளை விளாசியுள்ளார். ஆல்ரவுண்டர் ஆன சமித் , பந்துவீச்சில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இருந்தும் இவர் விளையாடிய அணிடிராவில் முடிந்தது.
இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் மூன்று அரை சதங்கள் அடித்துள்ளார். வருங்காலத்தில் தந்தையே போல இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக இருப்பார் என ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.