விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதாருக்கு வாய்ப்பு..?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. ஆனால் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரர் இடம் பெறுவார் என கேள்வி இருந்த நிலையில், விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார், புஜாரா , அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர்களில் ஒருவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ விருதுகள்: ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!
இருப்பினும் பிசிசிஜ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ரஜத் படிதார் 8 மாதங்கள் பிறகு காயத்திலிருந்து திரும்பிய அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஜத் படிதாருக்கு விளையாட வாய்ப்பு அளித்துள்ளதால் தான் இந்திய ஏ அணியில் ரஜத் படிதார் அவருக்கு பதிலாக ரிங்கு சிங் இடம்பிடித்துள்ளார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தியா ஏ அணிக்கும் , இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில், ரஜத் படிதார் தொடக்க ஆட்டக்காரராக முதல் இன்னிங்ஸில் 111 ரன்கள் குவித்தார். இதன்பின், 2-வது இன்னிங்ஸிலும் ரஜத் படிதார் 151 ரன்கள் எடுத்தார். இந்த 2 சதங்களுக்குப் பிறகு தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் விளையாட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025