குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

Rajasthan Royals WON

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 20 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. களமிறங்கியவுடன் என்ன தான் நடந்தது என்று புரியாத அளவுக்கு குஜராத் அணியின் பந்துவீச்சை சிக்ஸர் பவுண்டரி என தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி இருவரும் நாங்கள் இரண்டு பேரும் எப்படி அதிரடி காண்பிக்கிறோம் பாருங்க என்பது போல அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு பக்கம் நிதானம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாலும் அவரை விட பல மடங்கு அதிரடி காட்டும் விதமாக சிக்ஸர் மூலம் மட்டுமே வைபவ் சூர்யவன்ஷி  தனது அரை சதத்தை விளாசினார் என்று சொல்லலாம்.  அரைசதத்தை தொடர்ந்து தனது கியரை இன்னும் அதிரடிக்கு மாற்றி வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி ஐபிஎல் வரலாற்றில் குறைவான வயதில் சதம் விளாசியவர் என்கிற சாதனையையும் படைத்தார்.

இவருடைய அதிரடி ஆட்டம் முடிவுக்கு வந்தால் மட்டும் தான் நமக்கு வெற்றிகிடைக்கும் என குஜராத் பந்துவீச்சாளர்களுமே யோசிக்க தொடங்கிவிட்டார்கள். அந்த சமயம் தான் 11 ஓவரின் 5 வது பந்தில் வைபவ் சூர்யவன்ஷி 101 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தாலும் அந்த சமயம் அணி 166 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடி அவர் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்ற நிலையில் ஜெய்ஷ்வால் அரைசதம் விளாசி அசத்தினார்.

இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5  ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குஜராத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக பிரபல கிருஷ்ணா, ரஷீத் கான் இருவரும் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்