IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டைகளை இழந்து 196 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 76 ரன்களும், தீபக் ஹூடா 50 ரன்களும் எடுத்தார். அதே நேரத்தில் ராஜஸ்தான் அணியில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். 197 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் களமிறங்கினர்.
வழக்கம் போல தொடக்க வீரர் பட்லர் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் பவர் பிளேவில் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் பட்லர் 34 ரன்கள் எடுத்திருந்தபோது யாஷ் தாக்கூர் ஓவரில் போல்டானார். அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்க 7-வது ஓவரின் முதல் பந்தில் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்திருந்தபோது ரவி பிஷ்னோயிடம் கேட்சைக் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களம் கண்ட ரியான் பராக் வந்த வேகத்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இதனால் ராஜஸ்தான் அணி 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் , துருவ் ஜூரல் இருவரும் நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர்.
இவர்கள் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் விளாசினார். இறுதியாக ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் சஞ்சு சாம்சன் 71* ரன்களுடனும் , துருவ் ஜூரல் 52* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இவர்கள் கூட்டணியில் 121 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதுவரை ராஜஸ்தான் அணி ஒன்பது போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 8 போட்டிகள் வெற்றியும், ஒரு போட்டியும் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.
தற்போது ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…