MIvRR [File Image]
ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையாமல் சோகத்தில் முடிந்தது.
காரணம் முதல் ஓவரில் மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, நமன் திர் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். மும்பை அணியில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா இருவரும் மட்டுமே நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். அதன்படி அதிகபட்சமாக திலக் வர்மா 32, ஹர்திக் பாண்டியா 34 ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 125 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் டிரெண்ட் போல்ட், சாஹல் தலா 3 விக்கெட்டையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், அவேஷ் கான் 1 விக்கெட்டை பறித்தார். ராஜஸ்தான் அணி 126 என்ற எளிதான இலக்குடன் அணியின் தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினார்கள்.
முதல் ஓவரின் கடைசி பந்தில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து வெறும் 10 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கி வந்த வேகத்தில் 3 பவுண்டரி அடித்து 12 ரன் எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்த 2 ஓவரில் எதிர் பக்கம் இருந்த தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் நிலைத்து நிற்காமல் 13 ரன் எடுத்து நடையை கட்டினார்.
பின்னர் ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் கூட்டணி அனைத்து இலங்கை நோக்கி நிதானமாக விளையாடி வந்தனர். ஆனால் நிதானமாக விளையாடி வந்த அஸ்வின் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் இருந்த ரியான் பராக் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு கடைசிவரை களத்தில் 54* ரன்களுடன் இருந்தார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டை பறித்தார். மும்பை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…