ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல்2024: ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி மோதியது. இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் குல்தீப் சென், அவேஷ் கான் தலா 2 விக்கெட்டையும்,  சாஹல், டிரென்ட் போல்ட் தலா 1 விக்கெட்டை பறித்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன்  109 ரன்களும்,  ரகுவன்ஷி 30 ரன்களும் எடுத்தனர். 224 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால்,  ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். இலக்கு பெரிது என்பதால் ஆட்டம்தொடக்கமே அடித்து விளையாட ராஜஸ்தான் அணி முடிவு செய்தனர். அதன்படி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 9 பந்தில் 19 ரன்கள் எடுத்து இருந்தபோது வெங்கடேஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் வெறும் 12 ரன்கள் எடுத்து 5-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் கண்ட  ரியான் பராக் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, 34 ரன்கள் எடுத்திருந்தபோது ரஸ்ஸலிடம் கேட்சை கொடுத்து நடையை கட்டினார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து துருவ் ஜூரல் 2,  அஷ்வின் 8 ரன்களிலும், ஹெட்மியர் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இருப்பினும் மறுமுனையில் விளையாடிய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடி 36 பந்தில் அரைசதம் அடித்தார்.

17-வது ஓவரை சுனில் நரேன்  வீசினார். அந்த ஓவரில் ரோவ்மேன் பவல் முதல் 3 பந்தில் 2 சிக்ஸர் , 1 பவுண்டரி விளாசினார். அடுத்த பந்திலே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் களத்தில் அதிரடியாக விளையாடி வந்த  ஜோஸ் பட்லர் 55 பந்தில் சதம் விளாசி  107* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அதில் 6 சிக்ஸர்,  9  பவுண்டரி  அடங்கும்.

இறுதியாக ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ராஜஸ்தான் 7 போட்டியில் விளையாடி 6 போட்டிகள் வெற்றியும்,  1 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் 4 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து  உள்ளது.

 

Published by
murugan

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

7 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

8 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

9 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

9 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

9 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

10 hours ago