வெளியேற்ற காத்திருக்கும் ராஜஸ்தான் .. பொறியில் சிக்குமா ஹைதராபாத்? இரு அணிகளின் வியூகம் இதுதான் !

SRHvRR

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு நுழையும் குவாலிபயர்-2 போட்டி இன்று நடைபெற உள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதி போட்டியை நெருங்கியுள்ளது, இந்த இறுதி போட்டிக்கு முதல் அணியாக ஏற்கனவே கொல்கத்தா அணி ஹைதரபாத் அணியை குவாலிபயர் முதல் போட்டியில் வெற்றி பெற்று சென்றுள்ளது. அதே போல இன்று இறுதி போட்டிக்கு தகுதி பெரும் 2-வது அணியாக தகுதி பெற இன்று ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இன்று நடைபெறும் இந்த பிளே ஆஃப் சுற்றின் குவாலிபயர்-2 போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதுவார்கள். இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. கடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூரு அணியை வெளியேற்றி இந்த போட்டியில் ஹைதரபாத் அணியுடன் மோதவுள்ளது.

இரு அணிகளின் வெற்றி வியூகம் :

இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல்2024 தொடரில் ஒரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் இருந்த ராஜஸ்தான் அணி வெறும் 1 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கும். அந்த அளவிற்கு அந்த போட்டி த்ரில்லலாக அமைந்திருக்கும். லீக் போட்டியில் தோல்வியை தழுவியதால் அதற்கு பதிலடி குடுக்க ராஜஸ்தான் அணி காத்துக்கொண்டே இருக்கிறது.

ராஜஸ்தான் அணிக்கு இருக்கும் பெரிய தலை வலி டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும் தான். கடந்த லீக் போட்டியில் டிராவிஸ் ஹெட் ஒரு அசத்தலான அரை சதம் அடித்திருப்பார். இந்த இருவரும் ஆவேஷ் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்துப்பார்கள். மேலும், கடந்த இரு போட்டிகளாக 0 ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார். மேலும், இடது கை வேக பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தான் போல்ட் ஆகி வெளியேறி இருப்பார்.

இதனால் ராஜஸ்தான் அணியின் ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சில் அவரது விக்கெட்டுக்கு ஆபத்து உண்டு. அதே போல ராஜஸ்தான் அணியில் பட்லர் இல்லாததால் தொடக்கம் சரியாக அமையாமல் இருக்கிறது. இருப்பினும் ஜெய்ஸ்வாலின் விக்கெட் தான் பெரிய மாற்றத்தை நிகழ்த்தலாம். அவரை தொடர்ந்து களமிறங்கும் சஞ்சு சாம்சன், ரியான் பராக் இருவரும் நிலைத்து ஆடக்கூடியவர்கள் அதனால் அவர்களது விக்கெட் ஹைதராபாத் அணிக்கு மிகவும் முக்கியமானது.

அதே போல இரு அணிகளிலும் வேக பந்து மற்றும் சூழலில் கடுமையாக பந்து வீச ஆட்கள் உண்டு இதனால் இந்த போட்டியானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் கொல்கத்தா அணியையும் வெற்றி பெற்றால் ஐபிஎல் தொடரின் 2-வது கோப்பையை வெல்வதற்கு இந்த இரு அணிகளுக்கும் ஒரு அறிய வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பார்க்கப்படும் 11 வீரர்கள் :

ஹைதராபாத் அணி

அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்

ராஜஸ்தான் அணி

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், தனுஷ் கோட்டியான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்