#IPL2020 : 5 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி

5 ஓவர்களில் 3 விக்கெட்டை ராஜஸ்தான் அணி இழந்துள்ளது.
இன்று நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் , விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதி வருகின்றது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள செயிக் சயத் ( Sheikh Zayed Stadium) மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஸ்மித் ,பட்லர் ஆகியோர் களமிறங்கினர்கள்.ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலே பெங்களூர் வீரர் உடனா பந்துவீச்சில் ஸ்மித் 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.இவரைத்தொடர்ந்து பட்லர் 22 ரன்களில் சைனி பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.மேலும் சாம்சனும் 4 ரன்னில் சாகல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். தற்போது களத்தில் உத்தப்பா 1 ரன் , மகிபல் லொம்ரோர் 1 ரன்னுடன் விளையாடி வருகின்றனர். ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 33 ரன்கள் எடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இதெல்லாம் நமக்கு தேவையா குமாரு’.., சூட்கேஸ் உள்ளே காதலி.! வசமாக சிக்கிக்கொண்ட மாணவன்.!
April 12, 2025
பாஜக – அதிமுக கூட்டணி: ”விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி”- தவெக தலைவர் விஜய்.!
April 12, 2025