ஐபிஎல் 2024: ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் , ராஜஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 29 ரன்களும், லிவிங்ஸ்டோன் 21 ரன்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணியில் கேசவ் மகாராஜ், அவேஷ் கான் தலா 2 விக்கெட்டையும், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென் தலா 1 விக்கெட்டை பறித்தனர். 148 ரன்கள் எளிதான இலக்குடன் ராஜஸ்தான் அணியில் கோட்யான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய கோட்யான் 24 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 18, ரியான் பராக் 23, துருவ் ஜூரல் 6 ரன்களுடன் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசியில் இறங்கிய ஹெட்மியர் 10 பந்தில் 27* ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் ரபாடா, சாம் கரண் தலா 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங், லிவிங்ஸ்டன், ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…