“எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 வரை எடுத்தது நல்லது”- குமார் சங்கக்கரா!
ராஜஸ்தான் அணி, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று அந்த அணியின் இயக்குனர் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 16-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஒருகட்டத்தில் 140 ரன்களை கடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனைதொடர்ந்து களமிறங்கிய ஆள்-ரவுண்டர்கள் சிவம் துபே, ராகுல் தேவாதியா தேவாதியா அதிரடியாக ஆட, ராஜஸ்தான் அணியின் ஸ்கொர் உயர்ந்தது.
இறுதியாக ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதனை பெங்களூர் அணி, ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் எளிதாக வெற்றிபெற்றது. போட்டியில் முடிவில் பேசிய ராஜஸ்தான் அணியின் இயக்குனர் சங்கக்கரா, ராஜஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பெர்பாமன்ஸையும் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், பேட்டிங், பவுலிங், பில்டிங் என அனைத்திலும் நல்ல செயல்திறனை ஒன்றாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த போட்டியில் மிகவும் எளிதாக வேண்டும் என்றும், அடுத்த போட்டிகளில் நன்றாக ஆடவேண்டும் என்று தெரிவித்த சங்கக்கரா, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று குறிப்பிட்டார்.
இந்த போட்டி, ஆறு முதல் ஏழு ஓவர்கள் மற்றும் அதன்பின் வந்த ஓவர்கள் என இரண்டு பகுதியாக இருந்தது. நிறைய விக்கெட்டுகளை இழந்தபின்னர் 176 ரன்களை எட்ட முடிந்தது. அதற்கான திறன் வீரர்களிடம் இருக்கிறது என்று தெரிவித்த அவரை, முத்தாக நான்கு இடங்களில் இருக்கும் வீரர்கள் அடித்தால் பெரியஸ் ஸ்கொரை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.