ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 143 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 188 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 33 ரன்கள் எடுத்தார்.
189 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் முதலே அதிரடியாக ராஜஸ்தான் விளையாடினர். மனன் வோரா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து வெளியேறினார்.
மேலும், நிதானமாக விளையாடி வந்த பட்லர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 49 ரன்னில் ஜடேஜா வீசிய சுழல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அணியின் எண்ணிக்கை 87 இருக்கும்போது ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ராஜஸ்தான் அணி 97 ரன்கள் எடுப்பதற்குள் சிவம் துபே, மில்லர், ரியான் பராக், மோரிஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 143 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். சென்னை அணியில் மொயீன் அலி 3, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
மேலும், ரவீந்திர ஜடேஜா இப்போட்டியில் 4 கேட்சை பிடித்துள்ளார். சென்னை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வியை தழுவியுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…