ஐபிஎல் 2024 : காட்டடி அடித்த சாம்சன், ரியான் பராக்.. குஜராத்திற்கு 197 ரன்கள் இலக்கு..!
ஐபிஎல் 2024: முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் களமிறங்கினார்.
நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்த ஓவரிலே பட்லர் 8 ரன் எடுத்து விக்கெட் இழந்தார். பின்னர் கூட்டணி அமைத்த சஞ்சு சாம்சன், ரியான் பராக் இருவரும் சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். சிறப்பாக விளையாடி இருவரும் அரை சதம் விளாசினர்.
அதில் ரியான் பராக் 48 பந்தில் 5 சிக்ஸர், 3 பவுண்டர் என மொத்தம் 76 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த ஹெட்மியர் 13* ரன்கள் எடுத்து கடைசிவரை இருக்க, மறுபுறம் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி மொத்தம் 68* ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணியில் உமேஷ் யாதவ், ரஷித் கான், மோகித் சர்மா தலா 1 விக்கெட்டை பறித்தனர்.