#RRvCSK: மிரட்டி விட்ட நிதிஷ் ராணா…. 183 ரன்கள் இலக்கை எட்டுமா சென்னை..!
இன்றைய 2-வது போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டைகள் இழந்து 182 எண்கள் எடுத்தனர்.

இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்கினர்.
வந்த வேகத்தில் ஜெய்ஸ்வால் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த இரண்டாவது பந்திலே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் நிதிஷ் ராணா களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 21 பந்தில் 52 ரன்கள் எடுத்து அரை சதம் பூர்த்தி செய்தார். ஒருபுறம் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாட மறுபுறம் நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி வந்தார்.
இதனால் ராஜஸ்தான் அணி பவர் பிளே முடிவில் 79 ரன்கள் குவித்தனர். ராஜஸ்தான் அணி விக்கெட்டை பறிக்க முடியாமல் சென்னை திணறி வந்த நிலையில் 8-வது ஓவரை நூர் அகமது வீசியபோது அந்த ஓவரில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் விக்கெட்டை பறித்தார். இருப்பினும் நிதிஷ் ராணா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தி வந்தார்.
இதற்கிடையில் 12 வது ஓவரின் போது நிதிஷ் ராணா இறங்கி அடிக்கும் முயன்ற போது ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் நிதிஷ் ராணா 36 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என மொத்தம் 81 ரன்கள் குவித்தார். அடுத்து களம் கண்ட துருவ் ஜூரல் 3 ரன்னிலும்,
வனிந்து ஹசரங்க 4 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இருப்பினும் கேப்டன் ரியான் பராக் நிதானமாக விளையாடி 37 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டைகள் இழந்து 182 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் கலீல் அகமது 3 விக்கெட்டையும், நூர் அகமது, பத்திரனா தலா 2 விக்கெட்டையும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025