ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா இருவரும் களமிறங்கினர். ஆனால் இவர்கள் வந்த வேகத்தில் பட்லர் 8, மனன் வோரா 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இறங்கிய டேவிட் மில்லர் ரன் எடுக்காமல் நடையை காட்டினார்.
அடுத்து சஞ்சு சாம்சன், சிவம் துபே இருவரும் மட்டுமே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். சஞ்சு சாம்சன் 21 ரன்கள் இருக்கும்போது வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை அடித்து மேக்ஸ்வெலிடம் கேட்சை கொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த சிவம் துபே அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து இறங்கிய ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஜோடி சேர்ந்த ராகுல் தேவட்டியா , கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் தேவட்டியா 40 ரன்கள் குவித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…