பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இன்று நடைபெறும் 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி,துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் விவரம்:
படிக்கல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி (கேப்டன்), ஏ.பி.டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, கிறிஸ் மோரிஸ், இசுரு உடனா , சைனி, குர்கீரத் சிங் , சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:
பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் திவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், உனட்கட், கார்த்திக் தியாகி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியையும்,3 போட்டிகளில் வெற்றியும் பெற்று 7-ஆம் இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 5 போட்டிகளில் வெற்றியும் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் உள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…