#IPL2020 : திவாதியா ,பராக் அதிரடி ! ராஜஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Published by
Venu

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இன்று நடைபெற்ற 26-வது ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ,ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது.ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 54 ரன்கள் ,வார்னர் 48 ரன்கள் அடித்தனர்.ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் உனட்கட், தியாகி, ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

ராஜஸ்தான்  அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டோக்ஸ்  , பட்லர் இருவரும் களமிறங்கினார்கள்.ஆனால் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் ,ஸ்மித் 5 ரன்கள் ,பட்லர் 16 ரன்களில் வெளியேறினார்கள்.ஓரளவு தாக்குபிடித்த சஞ்சு 26 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.இவரைத்தொடர்ந்து உத்தப்பாவும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் திவாதியா 45 *, ரியன் பராக் 42 * ரன்கள் அடித்தனர். ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய ரசித் கான், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.இதனால், ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகள் பெற்று 6-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  ஹைதராபாத்  அணி 6 புள்ளிகளுடன் அணி 5-வது இடத்தில் உள்ளது.

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

13 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

26 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

42 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

45 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

52 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

56 mins ago