#IPL2020 : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு

Default Image

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் 15-வது ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் , விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள செயிக் சயத் ( Sheikh Zayed Stadium) மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடி உள்ளது.இரு அணிகளும் தலா 2 வெற்றி,ஒரு தோல்வி அடைந்துள்ளது. ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் உள்ளது.பெங்களூர் அணி 6 வது இடத்தில் உள்ளது.இரு அணிகளும் 3 வது வெற்றிக்காக போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன் ),இசுறு உடனா , ஆரோன் பிஞ்ச், டிவில்லியர்ஸ், படிக்கல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, குர்கீரத் , ஆடம் சம்பா , சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் அணியின் வீரர்கள் விவரம் :

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன் ), ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் திவாட்டியா, டாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால்,மகிபல் லொம்ரோர் , ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்