குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சில் சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் 119 இலக்கு
ஐபிஎல் தொடரின் இன்றைய 48வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்(14), ஜோஸ் பட்லர்(7) ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தை தந்தனர்.கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
அதன் பின்பு வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கான் 3 விக்கெட்களையும் நூர் அகமது 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.முகமது ஷமி,ஹர்திக் பாண்டியா மற்றும் ஜோசுவா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
119 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.5 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 39 ரன்களை எடுத்துள்ளது.