PBKS vs RR : பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான்! வெற்றிக்கு 206 ரன்கள் டார்கெட்!
பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி சண்டிகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து விளையாட தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கத்தை அளித்தனர். கேப்டன் சஞ்சு 26 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் அவுட் ஆகினார். ஜெய்ஸ்வால் 45 பந்தில் 3 பவுண்டரி , 5 சிக்ஸர் அடித்து 67 ரன்கள் குவித்து பெர்குசன் பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
நிதிஷ் ராணா 12 ரன்களில் வெளியேறினார். ஹெட்மையர் 20 ரன்னில் அவுட் ஆகினார். ரியான் பராக் 25 பந்தில் 3 சிக்ஸர் , 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்துள்ளனர்.
பஞ்சாப் அணி சார்பாக பெர்குசன் 2 விக்கெட்களையும், மார்கோ ஜான்சன், அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 20 ஓவரில் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி அடுத்து களமிறங்க உள்ளது.