ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றுக் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் சக்காரியாவுக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால், குஜராத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர்,பரிசோதனை செய்ததில் காஞ்சிபாய் சக்காரியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.மேலும்,அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பும் உள்ளது.
இதனையடுத்து,சேதன் சக்காரியாவின் தந்தைக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் இன்று சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்,சேதன் சக்காரியாவின் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கமும் சேதனின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்,கடந்த ஜனவரி மாதத்தில் சேதன் சக்காரியாவின் சகோதரர் ராகுல் சக்காரியா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…