அடுத்த ஜெய்ஸ்வால் இந்த இளம் வீரர் தான்… சங்ககாரா பெருமிதம்.!

Yashasvi Jaiswal - Riyan Parag

IPL2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் மீது அதிக நம்பிக்கை உள்ளது. – பயிற்சியளர் சங்ககரா.

ஐபிஎல் 17வது சீசன் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்தும், ராஜஸ்தான் அணி இளம் வீரர்கள் குறித்தும் நேற்று ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சங்ககரா பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிடுகையில், ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் பற்றி அதிகம் பகிந்து கொண்டார். ரியான் பராக் திறமை கண்டு அவரது 17வது வயதிலேயே ராஜஸ்தான் அணி அவரை அணியில் எடுத்துவிட்டது. அப்போது முதல் இந்த சீசன் சேர்த்து 6வது ஆண்டாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு முதல் அவரது பங்கு ராஜஸ்தான் அணிக்கு அதிக பலன் கொடுத்து வருகிறது.

அவரது திறன் கண்டே, கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அவரை 4.6 கோடிக்கு மீண்டும் ராஜஸ்தான் அணி எடுத்தது. அவர் கடந்த சில சீசன்களாக பினிஷர் ரோல்களில் ரியான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 123.97 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

ஏற்கனவே, ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதனையும் ரியான் பராக் உள்ளிட்ட இளம் வீரர்கள் பார்த்து வருகிறார்கள். அது அவர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினால், அது அவர்களின் அடுத்தகட்டநகர்வுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்றும் பயிற்சியாளர் சங்ககரா கூறினார்.

கடந்த மார்ச் 24ஆம் தேதி லக்னோ அணியுடன் நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய ரியான் பராக்,  29 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடதக்கது. அன்றைய போட்டியில் லக்னோவை 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்