கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் 2-வது வெற்றியை பதிவு செய்தது..!
ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் – ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தனர். 134 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ஜோஸ் பட்லர் 5 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் சஞ்சு சாம்சன் இறங்கினார்.
சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 5 பவுண்டரி விளாசி 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய சிவம் துபே 22, டேவிட் மில்லர் 5 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசி வரை களத்தில் சஞ்சு சாம்சன் 42*, மில்லர் 24* ரன்களுடன் நின்றனர்.
ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடி 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. கொல்கத்தா இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.