RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?
ராஜஸ்தான் அணியும் குஜராத் அணியும் இதுவரை 7 முறை மோதியுள்ள நிலையில் 1 முறை மட்டுமே ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
ராஜஸ்தான் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக்(c), துருவ் ஜூரல்(w), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, யுத்வீர் சிங் சரக்
குஜராத் :
சாய் சுதர்சன், சுப்மன் கில்(c), ஜோஸ் பட்லர்(w), வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, கரீம் ஜனத், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மோசமான பார்மில் விளையாடி வருகிறது. அதே சமயம் குஜராத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. உதாரணமாக குஜராத் அணி 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 9 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று 9-வது இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025