தொடர் தோல்வியில் ராஜஸ்தான்..! இன்று சென்னை அணியுடன் மோதல்..!

RR vs CSK

ஐபிஎல் 2023 தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 37 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணியின் வீரர்கள் சிறந்த பார்மில் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ராஜஸ்தான் அணி, இதுவரை நடந்த 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக பெங்களூரூ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியைக்கண்ட ராஜஸ்தான் அணி இன்று நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் வெற்றிபெற முழு முனைப்போடு போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.

RRvCSK
RRvCSK [Image Source : ICC Cricket Schedule]

சென்னை vs ராஜஸ்தான் : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் : 

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (C/W), துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, ஆகாஷ் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் :

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (C/W), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ஆர் அஷ்வின், சந்தீப் சர்மா ஆடம் ஜம்பா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்