சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 188 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
சென்னை அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினார். கடந்த இரண்டு போட்டி போலவே ருதுராஜ் இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தமல் 10 ரன்னில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, மொயீன் அலி களமிறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த டு பிளெசிஸ் 33 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து ரெய்னா இறங்கினார். நிதானமாக விளையாடி வந்த மொயீன் அலி 26, ரெய்னா சுரேஷ் 18 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து இறங்கி அம்பத்தி ராயுடு வந்த வேகத்தில் 3 சிக்ஸர் உட்பட மொத்தம் 27 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்தது இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 188 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் சக்காரியா 3, கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டை பறித்தனர். 189 ரன்களுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…