IPL2024: வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!

Published by
murugan

IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

அதிகபட்சமாக பெங்களூரு அணியில் விராட் கோலி 33, ரஜத் படிதார் 34, மஹிபால் லோமரோர் 32 ரன்களும் எடுத்தனர். அதே நேரத்தில் ராஜஸ்தான் அணியில்  ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும்,  அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் சந்தீப் சர்மா, சாஹல் தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.

173 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதலே டாம் கோஹ்லர் அதிரடியாக விளையாடி 15 பந்தில் 4 பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் எடுத்து லாக்கி பெர்குசன் ஓவரில் போல்டாகி வெளியேறினார்.

அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி 30 பந்தில் 8 பவுண்டரி அடித்து  45 ரன்கள் எடுத்திருந்தபோது தினேஷ் கார்த்தியிடம் கேட்சை கொடுத்து நடை கட்டினார். அடுத்து ரியான் பராக்  களமிறங்க அடுத்த சில நிமிடங்களில் கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் வந்த துருவ் ஜூரல் வந்த வேகத்தில் வெறும் 8 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஹெட்மியர், ரியான் பராக் இருவரும் கூட்டணி அமைத்து ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 18-வது ஓவரில் ரியான் பராக் 36 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்த 2-வது பந்தில் மற்றோரு வீரரான ஹெட்மியர் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை ரோவ்மேன் பவல் 10* ரன்னுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.

ராஜஸ்தான் அணி நாளை மறுநாள் ஹைதராபாத் அணியுடன் 2-வது குவாலிபயர் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பெற உள்ளது. 

Published by
murugan

Recent Posts

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

3 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

3 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

4 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

22 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

23 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

24 hours ago