இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
மேலும், ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விலங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், இது பல தரப்பில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரெய்னா, ஹர்பஜன் விலகியதை தொடர்ந்து, தற்பொழுது ராயீடு மற்றும் பிராவோ காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது, சென்னை அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலாளர் காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் ரெய்னா தனது சொந்த காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவரை எதிர்பார்க்க முடியாது என கூறினார் .
ரெய்னாவின் அவரது தனிப்பட்ட கோரிக்கையை நாங்கள் மதிக்கிறோம் என தெரிவித்த அவர், அவர் அணியில் இணைவது குறித்த எந்த ஒரு முடிவையும் யோசிக்கவே இல்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சென்னை அணி இழந்த பாதையை மீண்டு வந்து வெற்றி பாதைக்கு செல்லும் எனவும், அடுத்த போட்டியில் போட்டியில் அம்பத்தி ராயுடு மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாகவும், போட்டிகளில் நாங்கள் செய்த அனைத்து தவறுகளையும் திருத்த போகிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரெய்னாவின் ரசிகர்கள், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட, #ComeBackMrIPL என்ற ஹாஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…