200-வது சிக்ஸர் விளாசிய சின்ன தல ரெய்னா..!
ரெய்னா ஐபிஎல் தொடரில் இதுவரை 200 சிக்ஸர் விளாசிய பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் , டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இதனால் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கி ரெய்னா வந்த வேகத்தில் ஒரு சிக்சர் விளாசினார்.
இதனால், ரெய்னா ஐபிஎல் தொடரில் இதுவரை 200 சிக்ஸர் விளாசிய வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.