நிடாஹஸ் ட்ராஃபிக்கான முத்தரப்பு டி20 போட்டியில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் கடந்த 12ம் தேதி இலங்கையுடன் நடந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சுரேஷ் ரெய்னா 15 பந்துகளில் 27 ரன் எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டியில் 1452 ரன் குவித்து, தோனியை முறியடித்தார். இதுவரை தோனி, 1444 டி20 ரன்கள் சேர்த்துள்ளார். சர்வதேச அளவில், விராட் கோலி 1983 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்தின் மார்ட்டின் குப்தில் 2271 ரன்னுடன் முதலிடத்திலும், பிரண்டன் மெக்கல்லம் 2140 ரன்னுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
ரெய்னா, 71 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதம் அடித்துள்ளார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 133.70. அண்மையில், டி20 போட்டியில் 50 சிக்ஸர் விளாசிய மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரெய்னா பெற்றிருந்தார். யுவ்ராஜ் சிங் 74 சிக்சருடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 69 சிக்சருடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…