என்ன சொல்றீங்க …சிஎஸ்கே-ஆர்சிபி போட்டியில மழையா? அப்போ சிஎஸ்கே பிளே-ஆப் கனவு?
சென்னை : ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக சென்னை-பெங்களூரு அணிகள் மோதவிருந்த போட்டியில் மழை குறிக்கிடுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாகும் என்பதை இதில் பார்க்கலாம்.
நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக வருகிற மே-18 ம் தேதி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்து கொள்ளும்.
அதே போல ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு வேளை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அதுவம் 18 வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவர்களுக்குள் இலக்கை சேஸ் செய்தாலோ பெங்களூரு அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ளும். இப்படி இருக்கையில் இந்த போட்டி தான் இரு அணிகளுக்கும் லீக்கின் கடைசி போட்டியாகும் அதனால் நடக்கவிருக்கும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் தற்போது இந்த போட்டியில் பெரும் சிக்கலாக மழை வர உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே18-ம் தேதி நடக்கவிருக்கும் இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்போது, வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது போல் ஒரு வேளை மழை பெய்தால் அது ஆர்சிபி அணிக்கு பெரிய இடியாகவே அமைந்து விடும். சென்னை அணி ஏற்கனவே நல்ல ரன்ரேட்டில் 14 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
ஆனால் ஆர்சிபி அணியின் ரன்ரேட் நன்றாக இருந்தாலும் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டு போட்டி நடைபெறாமல் இருந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகளை பெறுவார்கள். இதனால் பெங்களூரு அணி வெறும் 13 புள்ளிகள் மட்டுமே பெறுவார்கள். மேலும், இதன் காரணமாக பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறி விடும்.
அதே நேரம் 1 புள்ளிகளை பெற்று 15 புள்ளிகளுடன் இருப்பதால் சென்னை அணியின் பிளே ஆஃப் சுற்றும் கேள்வி குறியாகிவிடும். ஒரு வேளை இப்படி நடந்து, மறுபுறம் ஹைதராபாத் அணியும், லக்னோ அணியும் இருக்கிறன்ற போட்டிகளில் வெற்றி பெற்றால் சென்னை அணியும், பெங்களூரு அணியும் தொடரிலிருந்து வெளியேறி விடுவார்கள். இதனால் சென்னை அணி ரசிகர்களும், பெங்களூரு அணி ரசிகர்களும் சற்று கவலையில் இருந்து வருகின்றனர்.