ராகுல் டிராவிட்டை கடுப்பேத்திய இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம்!
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ,பெங்களூரைச் சேர்ந்த விக்ரம் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிதி நிறுவனம் தம்மிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரில் இயங்கிவந்த விக்ரம் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிதி நிறுவனம், 800 முதலீட்டாளர்களிடம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தது, கடந்த 3ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிறுவனத்தில், ராகுல் டிராவிட், சாய்னா நோவால் ஆகியோரும் கோடிக்கணக்கான ரூபாயை இழந்தது தெரியவந்தது.
இந்நிலையில், போலீசில் புகார் அளித்துள்ள ராகுல் டிராவிட், விக்ரம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் 20 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை 16 கோடி ரூபாயை வட்டி என்ற அடிப்படையில் கொடுத்த நிறுவனம், அதன்பிறகு பணம் தரவில்லை என்று கூறியுள்ள ராகுல் டிராவிட், 4 கோடி ரூபாயை விக்ரம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.