இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்..!

Default Image

இலங்கை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கிறது. மேலும்,இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் இந்திய அணி அங்கே மோதவிருக்கிறது. இவையனைத்தும் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கவுள்ளது.

இதனிடையே,  ஜூலை மாதம்  இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டி (ஜூலை 13, 16, 19) மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் (ஜூலை 22, 24, 27) பங்கேற்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

மேலும்,  இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி விளையாட இருப்பதால் , இந்திய இரண்டாம் தர அணி இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவித்தார். இதில் ஐபில் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். மேலும் இந்த அணியின் கேப்டனாக, ஷிகர்தவான் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது, இந்திய அணியின் பயிற்சி குழுவினர் இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களுக்கு பயிற்சியளித்து வருவதால், இலங்கை தொடருக்கு ட்ராவிடை நியமிக்க முயற்சி செய்தனர். அந்தவகையில், இந்திய ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளை சிறப்பாக பயிற்சியளித்த முன்னாள் கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதைப்பற்றி கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், ‘இலங்கை அனுப்பவிருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், இவர் இளம் இந்திய வீரர்களை ஏற்கனவே சிறப்பாக வழிநடத்தியுள்ளார். அதனால், இலங்கைக்கு செல்ல இருக்கும் வீரர்களை சிறந்த முறையில் ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க முடியும்’ என்று கூறியுள்ளார். மேலும், இலங்கையில் விளையாட இருக்கும் இந்திய அணியின் வீரர்களின் பெயர் இந்த மாத இறுதியில் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்