என்சிஏ தலைவர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்கும் நிலையில், ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.
இந்தியாவின் பலத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்த ராகுல் டிராவிட், ஜூனியர் வீரர்களுடன் இந்திய U-19 மற்றும் A பயிற்சியாளராக விரிவாக பணியாற்றிய பிறகு ஜூலை 2019-இல் கிரிக்கெட் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிசிசிஐ, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) கிரிக்கெட் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இதில் ஏற்கனவே முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் பதவி வகித்தார்.
ராகுல் டிராவிடின் இரண்டு வருட ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வழக்கப்படி, பிசிசிஐ என்சிஏ தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பத்திற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15 ஆகும்.
ராகுல் டிராவிட் இந்த பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 2021 நவம்பரில் டி20 உலக கோப்பைக்கு பிறகு முடிவடையும் நிலையில், ராகுல் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா, இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணி பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். அதே நேரத்தில் இங்கிலாந்தில் டெஸ்ட் அணியுடன் இந்தியாவின் வரையறுக்கப்பட்ட ( limited overs squad) ஓவர்கள் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.
இலங்கையில் நடந்த ஆறு ஆட்டங்கள் முடிந்த பிறகு, இந்திய தலைமை பயிற்சியாளராக நீண்ட கால அடிப்படையில் இருக்க வேண்டுமா என்று ராகுலிடம் கேட்கப்பட்டது. ஆனால் நான் எதையும் முன்னோக்கி நினைக்கவில்லை. நான் என்ன செய்கிறேன் என்பதை நான் அனுபவிக்கிறேன் என்று அவர் கூறினார்.
இந்திய அணி தலைமை பயிற்சியர்களுக்கு வயது வரம்பு 60 ஆகும். கடந்த மே மாதம் ரவி சாஸ்திரி 59 வயதை எட்டினார். டி20 உலகக் கோப்பையில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால் டிராவிட் அந்த பதவிக்கு வருவார் என கூறப்படுகிறது.
கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கூட்டணியில் இந்தியா இன்னும் ஒரு முக்கிய கோப்பையை வெல்லவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டு வெளிநாட்டு தொடர்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு டெஸ்ட் அணியாக சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
என்சிஏ என்பது அனைத்து கிரிக்கெட் பயிற்சித் திட்டங்களையும் நடத்துவதற்கு தலைமை கிரிக்கெட் பொறுப்பாகும். அகாடமியில் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து கிரிக்கெட் வீரர்களின் தயார்படுத்துதல், வளர்ச்சி மற்றும் செயல்திறனுக்கு அவர் பொறுப்பாவார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : நாளை இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லி, தமிழ்நாடு தலைநகர்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள்…
தர்மசாலா : ஹிமாச்சல் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.…
சென்னை : கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த…
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…