சென்னை : அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. அதில் இப்பொழுதே பல ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளி வந்து கொண்டே இருக்கிறது.
அதன்படி, சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது. அது தகவலாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்தது, தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ராஜஸ்தான் அணி அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்துள்ளார். மேலும், ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் மட்டுமே 1276 ரன்கள் அடித்துள்ளார்.
ஒரு காலத்தில் ராஜஸ்தான் அணிக்கு தூணாக நின்றவர் தற்போது மீண்டும் ஒரு தூணாக தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் அணியில் இணைந்துள்ளார். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பெங்களூரு அணிக்காக கேப்டனாக விளையாடி வந்தார்.
அதன் பிறகு 2012 மற்றும் 2014 ஆண்டுகளில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக விளையாடினார். அதை தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் 2015, 2016-ம் ஆண்டு ஆலோசகராக பணியாற்றினார்.
ஒரு வீரராக, ஒரு பயிற்சியாளராக கோப்பைகளை அதிகம் பார்க்காத வீரர் என்றால் அது ராகுல் டிராவிட் தான். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற தொடங்கி அவர் பதவி முடியும் காலத்தில் தான் டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டார்.
அதே போல பல வருடங்கள் ஐபிஎல் தொடர் விளையாடியும் அவரால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதே போல, இந்த ஆண்டு அவர் ராஜஸ்தான் அணிக்கு பக்கபலமாக இருந்து ஐபிஎல் கோப்பையை வெல்வார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…