பயிற்சியாளராக இணைந்தார் ராகுல் டிராவிட்! ஐபிஎல் கோப்பையை முத்தமிடுமா ராஜஸ்தான்?

ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்தார் ராகுல் டிராவிட்.

Rahul Dravid as Head Coach Of RR

சென்னை : அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள்  கூடிக்கொண்டே வருகிறது. அதில் இப்பொழுதே பல ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளி வந்து கொண்டே இருக்கிறது.

அதன்படி, சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது. அது தகவலாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்தது, தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ராஜஸ்தான் அணி அறிவித்துள்ளது.

அதன்படி, இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்துள்ளார். மேலும்,  ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் மட்டுமே 1276 ரன்கள் அடித்துள்ளார்.

ஒரு காலத்தில் ராஜஸ்தான் அணிக்கு தூணாக நின்றவர் தற்போது மீண்டும் ஒரு தூணாக தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் அணியில் இணைந்துள்ளார். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பெங்களூரு அணிக்காக கேப்டனாக விளையாடி வந்தார்.

அதன் பிறகு 2012 மற்றும் 2014 ஆண்டுகளில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக விளையாடினார். அதை தொடர்ந்து ராஜஸ்தான் அணியில்  2015, 2016-ம் ஆண்டு ஆலோசகராக பணியாற்றினார்.

ஒரு வீரராக, ஒரு பயிற்சியாளராக கோப்பைகளை அதிகம் பார்க்காத வீரர் என்றால் அது ராகுல் டிராவிட் தான். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற தொடங்கி அவர் பதவி முடியும் காலத்தில் தான் டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டார்.

அதே போல பல வருடங்கள் ஐபிஎல் தொடர் விளையாடியும் அவரால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதே போல, இந்த ஆண்டு அவர் ராஜஸ்தான் அணிக்கு பக்கபலமாக இருந்து ஐபிஎல் கோப்பையை வெல்வார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்