BigBreaking:இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்
திருமதி சுலக்ஷனா நாயக் மற்றும் திரு ஆர்பி சிங் ஆகியோர் அடங்கிய குழு இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக திரு ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறவுள்ள தொடரில் இருந்து பொறுப்பேற்பார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.