39 பந்துகளுக்கு 73 ரன்கள் அடித்து மிரட்டிய ராகுல் தெவாட்டியா.. குவியும் பாராட்டுக்கள்!
ஹரியானா – சண்டிகர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராகுல் தெவாட்டியா, 39 பந்துகளில் 73 ரன்களை அடித்து விளாசினார்.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களை மத்தியில் இடம்பிடித்தவர், ஹரியானா நாட்டை சேர்ந்த ராகுல் தெவாட்டியா. 27 வயதாகும் இவர், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் விளையாடி, 255 ரன்கள் எடுத்துள்ளார். தற்பொழுது ராகுல் தெவாட்டியா, ஹரியானா அணி சார்பாக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.
தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், டெஸ்ட் தொடருக்கு பின் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், மார்ச் 12 ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான 19 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ராகுல் தெவாட்டியாவும் இடம்பெற்றுள்ளார். மேலும், இந்திய அணிக்காக இவர் முதல் முதலாக தேர்வாகியுள்ளார். இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஹரியானா – சண்டிகர் அணிகளுக்கு இடையிலான போட்டி, கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் தெவாட்டியா, 39 பந்துகளில் 73 ரன்களை அடித்து விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். தெவாட்டியாவின் இந்த ஆட்டத்தை வரும் 24 ஆம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.