இந்திய நட்சத்திர வீரர்களையும் விட்டுவைக்காத நிதி மோசடி!நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த வீரர்கள் …
பல கோடி ரூபாய் பெங்களூருவைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்று, ராகுல் டிராவிட், சாய்னா நேவால் உள்ளிட்ட பிரபலங்களிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. விக்ரம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் டிராவிட் மற்றும் அவரது குடும்பத்தார் 35 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.
சாய்னா நேவாலும் ஒன்றரை கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். ஆண்டுக்கு 23 முதல் 35 சதவீதம் வரை வட்டி கொடுப்பதாக நிதி நிறுவனம் உறுதி அளித்ததால் பலரும் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், அந்த நிதி நிறுவனம் தற்போது மூடப்பட்டதுடன், உரிமையாளர் தலைமறைவானார். மோசடி பற்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் அளித்ததால், மேலாளர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது இந்த விவரங்கள் தெரிய வந்தன. இதில் டிராவிட்டின் குடும்பத்தார் 20 கோடி ரூபாய் வரை ஏற்கெனவே திரும்ப பெற்று விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.