புதிய சாதனை படைத்த இந்திய வீரர்! ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர்….
லோகேஷ் ராகுல் டி20 போட்டிகளின்போது ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் என்ற ‘பெருமை’யைப் பெற்றுள்ளார். நேற்றைய ஆட்டத்தில், இலங்கையின் ஜீவன் மெண்டிஸ் பந்த அடித்தபோது, ராகுலின் கால் ஸ்டெம்ப்பில் பட அவர் அவுட்டானார். இப்படியொரு முதல் இந்தியர் ‘பெருமை’யை டெஸ்ட் போட்டியில் லாலா அமர்நாத்தும் (1949), ஒருநாள் போட்டியில் நயன் மோங்கியாவும் (1995) பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.