இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நாளை தொடங்கி பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் குஜராத், அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட சென்னை வந்துள்ள இந்திய அணி தனிமைப்படுத்துதலை முடித்து, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவார். ரஹானே பல்வேறு யோசனைகளை அணிக்கு வழங்குவார். நானும், ரஹானேவும் ஒருவரை ஒருவர் மதிக்கின்றோம். அணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டுமே எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அகமதாபாத்தில் நடைபெறும் 3,4வது டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…