டெஸ்ட் போட்டியில் தோல்வியை காணாத கேப்டனாக ரகானே தொடர்ந்து வருகிறார்.
இந்தியா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் கடந்த 25-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்தியா 49 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
இந்தியா 7 விக்கெட் இழந்து 234 ரன்கள் அடித்த நிலையில் 283 ரன்கள் முன்னிலை பெற்று 284 ரன் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. நேற்றைய 4-ஆம் ஆட்டத்தின் கடைசி 4 ஓவர் இருந்தபோது தனது 2-வது இன்னிங்ஸை நியூசிலாந்து அணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, கடைசி நாளான இன்று நியூசிலாந்து போட்டியை டிரா செய்வதற்கான அணுகுமுறை கையாண்டனர். இதன் காரணமாக நியூசிலாந்து வீரர்கள் ரன் அடிப்பதில் கவனத்தை செலுத்தாமல் விக்கெட்டை இழக்காமல் நேரத்தை கடத்தி வந்தனர்.
5 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணியில் அஸ்வின் 3, ஜடேஜா 4 விக்கெட்டை பறித்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கேப்டனாக ரஹானே அணியை வழி நடத்தினார். இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் தோல்வியை காணாத கேப்டனாக ரகானே தொடர்ந்து வருகிறார்.
ரகானே இதுவரை 6 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதில் 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் டிரா செய்துள்ளார். அதேபோல 3 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில் மூன்று போட்டிலும் வெற்றி பெற்று அதிலும் தோல்வியை சந்திக்கவில்லை.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…