தோனியை புகழ்ந்த ரஹானே ..! மும்பை போட்டிக்கு முன் அவர் பேசியது என்ன ..?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன அஜிங்க்யா ரஹானே தற்போது சிஎஸ்கே நிர்வாகம் யூடூபில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்.எஸ்.தோனியை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்து வருகிறது. மேலும், வருகிற ஏப்ரல்-14 ம் தேதி அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இதை தொடரின் 6-வது போட்டியாக சென்னை அணி மோதவுள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன ரஹானே தற்போது சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்தோனி குறித்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.

அந்த வீடியோவை தற்போது சிஎஸ்கே அணியினர் யூடுப்பில் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் அவர், ” ஒரு மனிதனால் மட்டுமே நாங்கள் எல்லா இடங்களிலும் விளையாடும் பொழுதும் ஹோம் மேட்ச் விளையாடுகிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மேலும், அது ஒரு அற்புதமான உணர்வு. நாங்கள் அவருடன் விளையாடும்போது  ​​எங்களால்  பல விஷயங்கள்  கற்று கொள்ள முடிகிறது. ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நல்ல மனிதனாகவும் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

2011-ல் மான்செஸ்டரில் நான் டி20 அரங்கில் அறிமுகமான முதல் போட்டியின் போது ​​நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டோம். அன்றைய பயிற்சியின் முடிவில் அவர் என்னிடம் வந்து இவ்வளவு நேரம் பயிற்சி செய்ததை நீங்கள் போட்டியில் அப்படியே விளையாடுங்கள். நடைபெறும் போட்டியில்  உங்களை வெளிப்படுத்துங்கள் என்று அடிக்கடி கூறுவார். அவர் கூறியது தற்போது வரை வரை என்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது அதை அப்படியே சிஎஸ்கே-வில்  அவர் கேப்டனாக இருந்த போது என்னிடம் கூறினார்.

அவர், நீங்கள் உங்கள் விளையாட்டை விளையாடுங்கள் எந்த ஒரு கூடுதல் அழுத்தத்தையும் மனதில் எடுத்து கொள்ளாதீர்கள் என்று எப்போதும் கூறுவார். இது போன்று நமக்கு உறுதுணையாக பல ஆலோசனைகளை கூறுவதால் தான் அவர் மிகவும் திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். மேலும், அடுத்து நடைபெற இருக்கும் மும்பை அணியுடனான போட்டியில் நாங்கள் எங்களை இன்னும் வலுப்படுத்தி கொண்டிருக்கிறோம்”, என்று சிஎஸ்கேவின் பேட்டி ஒன்றில் பேசுகையில் அவர் கூறி இருந்தார்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

2 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

4 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

5 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

6 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

7 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

7 hours ago