இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆண்டிகுவாவில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் ,மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 5 , புஜாரா 2 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய கேப்டன் விராட்கோலி 9 ரன் உடன் வெளியேற இந்திய அணி 7.5 ஓவரில் 25 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
பின்னர் ராகுல் , ரஹானே இருவரும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடி ரஹானே அரைசதம் விளாசி 81 ரன்கள் எடுத்தார். முதல் நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்தது.பின்னர் நேற்று இரண்டாம் நாள் போட்டியை தொடங்கிய இந்திய அணி 96.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 297 ரன்கள் எடுத்து உள்ளது.
இந்நிலையில் ரஹானே டெஸ்ட் போட்டிகளில் முதல் 50 இன்னிங்ஸில் 8 சதங்கள் விளாசி இருந்தார்.ஆனால் தற்போது ரஹானே கடைசியாக விளையாடிய 46 இன்னிங்ஸில் 1 சதம் மட்டுமே அடித்து மோசமான சாதனையை வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…